பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஒருவர்
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர், 2022ஆம் ஆண்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டார்.
எனினும், சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
பிடியாணை
அவர் பிரித்தானியாவுக்கு சென்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இலங்கை அதிகாரிகள் அவரை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.

இந்தநிலையில், தாம் நாடு திரும்பினால் துன்புறுத்தப்படுவார் என்ற அடிப்படையில் தனக்கும் தனது மனைவிக்கும் அவர் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024இல், உள்துறை அலுவலக அதிகாரிகள் அவரது புகலிடக் கோரிக்கையை மறுத்து விட்டனர். மேலும் இந்த முடிவுக்கு எதிரான ஆரம்ப மேன்முறையீட்டை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடுக்கு குடியேற்ற தீர்ப்பாய நீதிபதி நிராகரித்துள்ளார்.

ஆனால், தமது விடயத்தில் முன்னைய நீதிபதி 'பாரபட்சமாக' நடந்து கொண்டதாக, அவர் கூறிய பின்னர் பிரித்தானியாவில் புகலிடம் கோருவதற்கான கூடுதல் வாய்ப்பு, அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan