வெளிநாட்டில் கணவன் - பிள்ளைகளை கொடுமைப்படுத்திய இளம் தாய் காதலனுடன் ஓட்டம்
குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 7 வயது மகளையும் 2 வயது ஆண் குழந்தையையும் பாதுகாப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு இரகசியமாக அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் வீட்டில் விடப்பட்ட 2 பிள்ளைகளையும் பாதுகாப்பிற்காக தங்களின் பொறுப்பில் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது 2 பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பின்றி விட்டு, கொடுமைப்படுத்தி, யாரிடமும் சொல்லாமல் முறையற்ற காதலனுடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும் அவரது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணின் மோசமான செயல்
நேற்று முன்தினம் மாலை வீட்டில் 2 பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு வீட்டுக்கு அருகில் வசிக்கும் இந்தப் பெண்ணின் உறவினர் தகவல் கேட்டதையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

2 பிள்ளைகளும் பட்டினியால் வாடி வந்ததாக கூறப்படுகிறது. 2 பிள்ளைகளின் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரும் அயலவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri