எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ள இளம் பிக்குமார்
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இளம் பௌத்த பிக்குமாரும் அடங்குவதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்
மேலும் பாடசாலை மாணவர்கள் மாத்திரமல்லாது பல்கலைக்கழக மாணவர்களும் குறிப்பிடத்தக்களவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இளம் வயதினரே இவ்வாறு எச்.ஐ.வி தொற்று உள்ளாகியுள்ளனர்.
18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே வேகமாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி வருவதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் நிகழ்ச்சித்திட்டம் கூறியுள்ளது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
