விறகு தேடி சென்ற இளைஞர் சடலமாக மீட்பு (Photos)
நுவரெலியாவில் கடந்த நாட்களுக்கு முன் காணாமல்போனதாக கூறப்படும் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நுவரெலியா சமுர்த்தி வங்கிக்கு அருகில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா - பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் சுந்தரலிங்கம் சசிதரன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை காணவில்லை என அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் கடந்த 6ம் திகதி முறைப்பாடு செய்திருந்தனர்.

| யாழில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்பு |
வீடு திரும்பாத இளைஞர்
இந்த முறைப்பாட்டில், கடந்த 3ம் திகதி வீட்டிற்கு விறகு தேடி வருவதாக தெரிவித்து சென்ற இளைஞரே அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதன்போது விறகு தேடி சென்ற பகுதியில் ஆற்றை கடக்க முற்பட்ட போது கால் தவறி ஆற்றில் விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், தேடுதல் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இளைஞர் சடலமாக மீட்பு
இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் நிலையத்தின்
பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri