நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்
காலி - அம்பலாங்கொடை பகுதியில் சமய நிகழ்வொன்றில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எட்கந்துர, தனபத்தேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.எம்.மகிஷ பகாஷண என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை, மாதம்பே நகர வீதியில் காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த இளைஞருக்கு வேறு எந்த தொற்று நோயும் இல்லை என்றும், இளைஞனின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல் Cineulagam
Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது? Manithan