யாழில் இருந்து வந்து கனகராயன்குளத்தில் திருட்டு: இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருடிய இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(16.03.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த சில இளைஞர்கள் நேற்று(14.03) இரவு தொலைபேசி மற்றும் தங்க நகைகள் என்பவற்றை திருடிச் சென்றனர்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குழுவை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று(15.03) அதிகாலை சிக்கியுள்ளார். ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள, கனகராயன்குளம் பொலிசார், கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
