முல்லைத்தீவில் இளைஞனால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றுக்கு பணிக்காக சென்றுள்ள திருகோணமலையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு இன்று (30..01.23 ) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இது குறித்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞன் மீது சட்ட நடவடிக்கை
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 15 வயதுடைய குறித்த சிறுமியுடன் இளைஞன் பாலியல் உறவில் ஈடுபட்டதாவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவரான இளைஞன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிய பொலிஸார் , பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைகாலமாக சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி வருகின்றமை அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
