மட்டக்குளி பகுதியில் நடந்த கொடூரம் - விசாரணையில் 5 இளைஞர்கள் அதிரடி கைது
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றுமுன்தினம்(25.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
கடந்த 22ஆம் திகதி மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நபர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடத்தப்பட்டவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நீரில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இந்தக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு - 15 மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று(26) நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கொலைக்கான உண்மையான பின்னணி என்ன? தனிப்பட்ட பகை காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது போதைப்பொருள் விவகாரங்கள் ஏதும் பின்னணியில் உள்ளனவா? என்பது குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam