நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள மோதல்! ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் புதிய நகர்வு
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிடம் வழங்கிய புதிய முன்மொழிவில், மூன்று நிலைகளை ஈரான் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசமான நாள்! லெபனான் மீது மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள மோதல்
இருப்பினும், இதற்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், ஈரான்-அமெரிக்க இராணுவ மோதல் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பின்னணியில் ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும்
எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது. வெடித்து சிதறினால் அதனை முன்பிருந்ததைபோல மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, ஈரான் தனது எண்ணெய் உற்பத்தித் திறனில் பாதியை இழக்கக்கூடும்.

குழாய்வழி இறுதியில் அடைபடும்போது, எண்ணெயை கப்பல்களிலோ அல்லது சேமிப்புக் கிடங்குகளிலோ சேமித்து வைக்க இடமில்லாததால் அதை மூட வேண்டிய நிலை வரும்போது, மிகவும் மோசமான ஒன்று நடக்கும். எனவே, ஈரானியர்கள் அழுத்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் நான் அதை அழுத்தமாகப் பார்க்கவில்லை. பெரிய அழுத்தம் என்னவென்றால்... நமது இராணுவம் நம்பமுடியாத அளவிற்கு வலிமையானது," என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களிடம் வரலாம், எங்களை அழைக்கலாம். உங்களுக்கு தெரியும், தொலைபேசி வசதி உள்ளது. எங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு வசதிகள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan