இரத்தினபுரியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.. தொடரும் தேடுதல் பணி
இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புளுவன, மாரலிய பகுதியைச் சேர்ந்த, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்த 32 வயதுடைய பிரசாத் சம்பத் விஜேரத்ன என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
தேடுதல் பணி..
இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்தவர் ஆவார்.

நேற்று அந்தப் பகுதியில் நண்பர்கள் சிலர் மாணிக்கக் கற்கள் தோண்டிக் கொண்டிருந்த வேளையில், அங்கு நீராடச் சென்ற மேற்படி இளைஞர் ஆழமான குழியில் சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
இளைஞர் திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, மாணிக்கக் கல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து எலபாத்த பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21