கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்! களமிறங்கிய வனவிலங்கு அதிகாரிகள் - பல மணிநேர தீவிர போராட்டம்
கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்திற்குப் பிறகு நேற்று மாலை (05) பாதுகாப்பாக வனப்பகுதியை நோக்கி விரட்டப்பட்டது.
பேராறு கிராமத்திற்குள் நுழைந்த இந்த காட்டு யானை, குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகினர்.
இது குறித்து கந்தளாய் வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவளிக்கப்பட்டது.
யானைகளை வெளியேற்றும் பணி
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல் வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸ் மற்றும் கிராம மக்கள் இணைந்து யானையை கிராமத்தை விட்டு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று மாலையளவில் யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது.

பிரதேச மக்கள் வேதனை
யானை ஊருக்குள் புகுந்திருந்த அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதுடன், பல வீடுகளின் பாதுகாப்பு வேலிகளையும் உடைத்து நாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளிடம் இருந்து பேராறு கிராம மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri