பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசு
வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது..
வெலிகம, பதேகம் பகுதியில் வசிக்கும் நபரொருவர் ஈஷி கேஷ் தளத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
இதனை தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் கீழ் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

விசாரணைக்கமைய, வெலிகம, பதேகம் பகுதியில் அமைந்துள்ள 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வீடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெற்ற பணத்தில் கொள்வனவு என்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 14 நாட்களுக்கு அந்தச் சொத்தை முடக்குமாறு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.