வீட்டு சுற்று மதில் இடிந்து விழுந்ததில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி - மண்டூரில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் வீட்டுச் சுற்று மதில் இடிந்து விழுந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மண்டூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த பேரின்பராஜா பேணுஜன் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றிரவு இரவுச்சாப்பட்டை உண்டு விட்டு வெளியில் சென்று வீடு திரும்பாத நிலையில் இன்று அதிகாலை வீட்டார் அவரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள சுற்று மதில் பக்கம் சென்ற போது சுற்று மதில் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அதில் கற்களுக்குள் சிக்குண்டு இறந்த நிலையில் குறித்த நபர் காணப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
