பாதாள உலக கும்பல்களுடன் நெருங்கிய உறவு! ராஜபக்சர்களை சிறையில் அடைக்க போகும் சாட்சியங்கள்
பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நன்கு அறியப்பட்ட பாதாள உலக நபர்களின் விசாரணையின் போது இந்த தொடர்புகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளை ஆய்வு செய்யத்தொடங்கியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது அரசியல்வாதிகளைக் கொண்ட குழுவிடம் குற்றப்புலனாய்வுத் துறையின் சொத்து விசாரணைப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகள் மிகவும் சிக்கலானவை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் பல ஆவணங்களை ஆய்வு செய்து வங்கிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று அவற்றை ஆய்வு செய்து சரிபார்க்க சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான முறைப்பாடுகள் இன்னும் வந்து கொண்டிருப்பதாகவும், பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
