போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இளைஞர்: தாயார் விடுத்துள்ள கோரிக்கை (Video)
யாழ். தாவடி தெற்கு பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (12.10.2022) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி யாழ். மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாயாரின் கோரிக்கை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் தாயார் குறித்த இளைஞரை திருத்தி தருமாறு பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



