முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து புதுக்குடியிருப்பு, சூசையப்பர் ஆலய சந்தியில் ஒட்டுசுட்டான் வீதியில் இன்று(24.06.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில், புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளினை திடீரென மாடு ஒன்று குறுக்கறுத்து சென்றுள்ளது.

இதன்போது, வேக கட்டுப்பாட்டினை இழந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பில் இருந்து எதிரே ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்து கொண்டிருந்த காரின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து விபத்துக்குள்ளான இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 250 மீற்றர் தூரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam