யாழில் போதைப்பொருளை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்!
யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உடலில் உட்செலுத்தியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 23ஆம் திகதி நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார்.
மரண விசாரணைகள்
24ஆம் திகதி அவரை பார்வையிட்ட வேளை மயக்கநிலையில் காணப்பட்டார். பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
