வவுணதீவு மக்களால் நைப்புடைப்பு செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மக்களால் நைப்புடைப்பு செய்யப்பட்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நைப்புடைப்பு
கடந்த 15 ம் திகதி, மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (25) அதிகாலை ஒரு மணிக்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரை சிறைச்சாலை நிர்வாகம் பெறுப்பேற்று, அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கோரிக்கை
இந்த நிலையில் குறித்த நபர் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
