விரைவில் சிக்கப் போகும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்! இரகசிய பொலிஸார் விசாரணை
இரகசியப் பொலிஸாரால் விசாரணைக்கு உள்ளாகிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே சபையில் கூச்சலிடுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க கூறியுள்ளார்.
தங்கள் வீடுகளுக்கு இரகசியப் பொலிஸார் விசாரணைக்கு சென்றதாலும், இதன்மூலம் அவர்கள் விசாரிக்கப்படுவதாலுமே எதிர்கட்சி எம். பிக்கள் சத்தமாக நாடாளுமன்றில் குரல் எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எதிர்க்கட்சியில் சத்தமாக கூச்சலிடுபவர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் பெயர் பட்டியல்
எனவே, நாடாளுமன்றத்தில் சத்தமாக கூச்சலிடும் எதிர்க்கட்சியினரின் பெயர் பட்டியலை ஒழுங்குப்படுத்தினால் சிறைக்குச் செல்வோரின் பட்டியலையும் அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், குற்றவாளிகள் தன்டனையில் இருந்து ஒருபோதும் விடுபட இயலாது என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |