குளத்துக்குள் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து: இளைஞர் மரணம்
அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில் பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.9.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குளக்கட்டில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது, உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அது குளக்கட்டிலிருந்து குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த உழவு இயந்திர சாரதி உள்ளிட்ட மூவர் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த வெலிகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்