உலகக் கிண்ணத்தை பறிகொடுத்த இந்திய அணி: வேதனை தாங்க முடியாத இளைஞனுக்கு நடந்த சோகம்
இந்திய அணியின் தோல்வியால் ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவரே இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று(19) இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு
குறித்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, குறித்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அனைத்தையும் தவிடு பொடியாக்கியது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டம்.
12 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் என காத்திருந்த இந்திய ரசிகர்களால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வியால் ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam
