தாயை பிரிந்து தந்தையுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி - பொலிஸாருக்கு தகவல் கொடுத்த அயலவர்
யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் இன்று(07.08.2026)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தந்தை வீட்டில் நடந்த சோகம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில், அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.
வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில், குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது.
அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.