சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகினாகல பகுதியிலுள்ள காணியொன்றில் நேற்று(23.11.2026)இடம்பெற்றுள்ளது.
23 வயதுடைய இளைஞர் நேற்று அந்தக் காணிக்குள் நுழைய முற்பட்டபோதே இந்தச் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
காணியின் குறுக்கே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மின்சாரக் கம்பியைச் சட்டவிரோதமாகப் பொருத்திய குற்றச்சாட்டில் லகினாகல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri