புத்தளத்தில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் துரதிஷ்டவசமாக பலி
புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக விழுந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (10.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது, பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், பின்னால் வருகை தந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
