தென்னிலங்கை ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்
ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹோட்டலின் அறையில் தங்கியிருந்தவரிடமிருந்து பதில் கிடைக்காமை குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் மீட்பு
பொலிஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது, அந்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
வறகொட, களனி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
