மன்னாரில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு
மன்னார் - மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்சனா மருதமடு பகுதியில் நேற்றைய தினம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வருக்கிடையில் முறன்பாடு
தட்சனா மருதமடுவை அண்மித்த காட்டுப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வதற்காக நான்கு இளைஞர்கள் தயாராகி நாட்டு துப்பாக்கியுடன் ஊருக்குள் நண்பர் ஒருவரை அழைக்க சென்றிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் இவ்வாறு வேட்டைக்கு செல்ல தயாரான நான்கு பேரில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்ப்பாராமல் நடந்த சம்பவம்
இதன்போது இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் வாக்குவாதத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதேச வைத்தியசாலைக்கு
கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து நோயாளர் வண்டி ஊடாக மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
