திருமணமான சில மாதங்களிலேயே மர்மமாக உயிரிழந்த இளம் பெண்
இங்கிரிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இங்கிரிய போதினாகல யஹலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷிகா தமயந்தி ஜயசிங்க என்ற பெண்ணே இவ்வாறு நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சமையலறையில் மயங்கிய நிலையில் மனைவி இருப்பதை கண்டுள்ளார்.
பிரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பி
உடனடியாக இங்கிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள அறையொன்றில் சுவரில் இருந்து மின்சார கம்பி பிரிக்கப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
அடை மழையின் போது மின்னல் தாக்கி பெண் உயிரிழந்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணின் திடீர் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.