யாழில் இளம் ஊடகவியலாளர் கொவிட் தொற்றால் மரணம்
யாழில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ் ஞானப்பிரகாசம், கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு விருதினை பெற்றவர்.
நேற்று செப்ரெம்பர் முதலாம் திகதி, தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டுவிட்டரில் அறிவித்திருந்தார். இன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மரணமானார்.
ஊடகவியலாளர் பிரகாஸ் தசைத்திறன் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கை மருத்துவ துறைக்கு வளர்ச்சியை கொடுக்க எனது உடலை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்க என தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்த நிலையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan