இளம் பெண் படுகொலை: பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பிரதான சந்தேகநபர் கைது
கம்பஹா - சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், அளவுக்கதிகமான மருந்தை நேற்றுமுன் தினம் (17) உட்கொண்டு பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம்
கடந்த 14 ஆம் திகதி சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கண்ணாடி போத்தலினால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கும் கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையிலான தகாத உறவின் போது, குறித்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |