தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்: தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்து
தமிழ் தேசியத்தின் பற்றாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என்ற வார்தையை உபயோகியுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அப்படியான ஒரு தருனத்திலேயே நாங்கள் எமது இலக்கை அடையமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தழிழ் மக்களின் வாழ்க்கை
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”நாங்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் தமிழர்களாகிய எங்களுக்கு அரசியல் தீர்வு இதுவரை வந்தபாடில்லை பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கின்றது அதேபோல எமது மக்களின் வாழ்க்கையும் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் குடிபரம்பல் வீழ்சியடைந்து தமிழீழத்தின் சிலபாகங்களான அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் தொகை ஒரு இலச்சத்துக்கு குறைவாக காணப்படும் நிலை இருக்கின்றது அதேபோல வன்னி மட்டக்களப்பில் கூட எமது மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்கள் வெவ்வேறு குழுக்கலாக வெவ்வேறு கட்சிகளாக பிரிந்து கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது.
தமிழ் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய 1975 அந்த காலத்திலே மாபெரும் தலைவர்களான தலைவர் செல்வநாயகம் ஜீ.ஜீ பொன்னம்பலம் வெவ்வேறாக இருந்தும் இரு துருவங்களும் ஒன்றினைந்து கட்டியதுதான் தமிழ் விடுதலைக் கூட்டணி.
இந்த கட்சி வரலாற்று கடமையும் பொறுப்பு மிக்க மக்கள் அமைப்பு தமிழ்கள் ஒரு தேசம் ஒரு தேசிய இனம் சுயநிர்ணய உரிமை கொண்ட என்ற அடிப்படையில் வட்டுக்கோட்டை பிரகடனத்தை மேற்கொண்டு 1977 தேர்தலில் ஒரு கொள்கையின் அடிப்படையில் மக்கள் ஆணையை பெற்றது.
தமிழ் மக்களை ஒரு சுயாதீன மக்கள் கூட்டமாக இருந்து வந்ததை 1983 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 6 ஆம் திருத்தச்சட்டம் மூலம் அந்த கொள்கை முறையை முன்வைக்க முடியாத நிலையை கொண்டு வந்தது அதன் பின்னர் உருவாகிய அனைத்து போராட்டங்களின் அடித்தளமும் அந்த உரித்தும் மக்கள் ஆணையால் தமிழ் விடுதலை கூட்டணிக்கு வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
