இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை

Sri Lanka Police Kandy Death
By Vethu Jun 20, 2026 11:59 AM GMT
Report

கண்டி, குண்டசாலையில் வசித்து வந்த 23 வயதுடைய திருமணமான இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது படுக்கையறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தாக்கி கொலை செய்துள்ளதாக அவரது உறவினர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சடலம் மீட்பு

எனினும் தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டதாகவும், பின்னர் கயிற்றை அறுத்து அவரது உடலைக் கட்டிலில் வைத்ததாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை | Young Girl Dies Mysteriously

குறித்த இருவரும் திருமணமாகி சுமார் இரண்டு வருடங்களாகியுள்ளது.

இந்தநிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான கணவனால் தனக்கு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவர் அடிக்கடி தன்னைத் தாக்குவதால், அடிக்கடி தனது சொந்த வீட்டிற்கு சென்று விடுவதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மீண்டும் கணவரின் வீட்டிற்குச் செல்வதாகவும், அவரிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்கு அவர் தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இதேவேளை, உயிரிழந்த பெண்ணால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றை கணவரின் குடும்பத்தினர் பொலிஸாருக்கும் நீதவானுக்கும் சமர்ப்பித்துள்ளனர்.

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை | Young Girl Dies Mysteriously

எனினும், அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து தங்களுடைய இறந்து போன மகளுடையது அல்ல என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது பெண்ணின் தரப்பை சேர்ந்தவர்கள் பதற்றத்துடன் நடந்து கொண்டமையால் அந்த இடத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர், பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US