யாழில் சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் மரணம்
யாழ்ப்பாணத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அரியாலை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்று(01.01.2025) காலை 9 மணியளவில் உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார். பின்னர் குறித்த பெண்ணின் தாயார் மதிய உணவுக்காக அவரை எழுப்பியவேளை அசைவற்று காணப்பட்டார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதனையடுத்து, சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |