இலங்கையின் கடற்பரப்பில் 11 கிலோ தங்கக்கடத்தலை முறியடித்த கடற்படை
கல்பிட்டி, பத்தலங்குண்டு தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 03 பேருடன் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்படையினர் இன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு, தங்க கடத்தல் மோசடி தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், இலங்கை கடற்படை கப்பலான, விஜயாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு படகுப் படைக்குழுவினர், நடவடிக்கையில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தங்க கடத்தல்
இதன்போது, பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தி, நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை மீட்டனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட 03 பேரும் கல்;பிட்டியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
[GE5XG2I]
இதற்கிடையில், சந்தேக நபர்களுடன், மீட்கப்பட்ட தங்கம், அடுத்த சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri