மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொலைக் குற்ற தண்டனைக் கைதியான, துமிந்த சில்வாவின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைத் திணைக்களத்தின்; வேண்டுகோளின் பேரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அமைக்கப்பட்ட இந்தக் குழு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சில்வாவுக்கு தொடர்ந்து பராமரிப்பு தேவையா என்பதை மதிப்பீடு செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மதிப்பீடு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என்றும், அதன் அறிக்கை சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கழிப்பறை வசதி
இதேவேளை துமிந்த சில்வாவுக்கு தனி கழிப்பறை வசதி வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் திசாநாயக்க மறுத்துள்ளார்.
சில்வாவின் வளாகத்தில் நடத்தப்பட்ட முன்னைய சோதனைகளில் கைத்தொலைபேசிகள்; அல்லது பிற தடை செய்யப்பட்ட சாதனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.