சுவிஸ் நாட்டில் இருந்து வவுனியா வந்த தமிழ் இளைஞனின் விபரீத முடிவு
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (21.09.2023) காலை, வவுனியா - தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்த தாயார் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மனைவி மற்றும் பிள்ளை சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும், தற்போது குடும்பத்தை பிரிந்த நிலையில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்து வசித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
