கஜேந்திரன் எம்.பியை தாக்கியவர்களுக்கு பிணை
திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று மாலை (21.09.2023) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
பொலிஸாரின் சமர்ப்பணத்தின்போது குறித்த நபர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதால்
ஆர்ப்பாட்டம், இனக்கலவரம் ஏற்படலாம் எனவும் அத்துடன் சாட்சிகள் வெளி
மாவட்டங்களில் இருப்பதனால் சூம் தொழில்நுட்பம் மூலம் சாட்சிகளை பெற்றுக்
கொள்வதாகவும் இவர்களை பிணையில் விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும்
இல்லை என உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தின் பின்னர்
குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த (17.09.2023) ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு செல்லும்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
விளக்கமறியல் நீடிப்பு
இந்நிலையில் இரு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை (18.09.2023) திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது (21.09.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் அக்டோபர் மாதம் 05 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
