கொழும்பில் இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி
பிலியந்தலை கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்பாகொட யக்கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்திற்கான பிரேக் உடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் முன்பக்க வலது சக்கரத்தில் இளைஞன் சிக்கியுள்ளதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam