இளம் குடும்பஸ்தர் தற்கொலை-களுவாஞ்சிக்குடியில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை
இந்த சம்பவம் கோவில் போரதீவு பொறுகாமம் என்ற பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது. சம்பவத்தில் 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான விநாயகமூர்த்தி சிறிவானுஜன் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழுத்தில் சுருக்கிட்டு கொண்ட இந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.வி.பி.ஏ.ரஞ்சித்குமார் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளை மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் நடத்தியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி
கிளி நொச்சி- புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம்25.12.2022 தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸ் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி:யது

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
