இரத்மலானை பிரதேசத்தில் சகோதரர் இருவர் உட்பட நால்வர் கைது
இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கல்கிஸை - இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வெளியே இழுத்துச் சென்று சிலர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து, கல்கிஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கத்தி மற்றும் வாள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri