தொடருந்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(02) இடம்பெற்றுள்ளது.
களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 26 வயதுடைய சந்தரலிங்கம் சுரேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார்.
400இற்கும் மேற்பட்ட கடவைகள்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதியே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதையடுத்து வைத்தியசாலைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்ட பின்னர் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் 1400இற்கும் மேற்பட்ட தொடருந்து கடவைகள் இருந்தும் 400இற்கும் மேற்பட்ட கடவைகள் பாதுகாப்பற்றதாகவே காணப்படுகிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 20 மணி நேரம் முன்

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
