கம்பஹாவில் தீ விபத்து: இளம் தம்பதி மரணம்
கம்பஹா பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும், அந்தப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையிலேயே தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மனைவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவனும் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தீ விபத்து
ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
