சொகுசு காரில் சிக்கிய இளம் தம்பதியினர் - மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்
பொலன்னறுவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் ஆவர்.
இரகசிய தகவல்
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலன்னறுவை ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) நடத்திய சோதனையின்போது இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய இளைஞரிடமிருந்து 27 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 6,310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் போதைப்பொருளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் இன்று (13) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளன.
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan