களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்
புதிய இணைப்பு
களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மின்சுற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அலுவலக அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலக ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (13) சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்சார அமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.