கோர விபத்தில் பலியான இளம் தம்பதியினர்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
ஹொரண - மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளம் தம்பதியினரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
ஹொரண - மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் கடந்த (04) திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்த விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வெளியான காரணம்
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பூர்ணா தினுஷ்க விதுமலின் மரணம் குறித்து ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி என்.எல். கே. லக்ஷனினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதேபோல், உயிரிழந்த எரங்கி சதுரிகா பெரேராவின் மரணம் குறித்து ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.எச். லியனகே அவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்கமைய, வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் வைத்திய அறிக்கைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே இருவரின் மரணத்திற்கும் காரணம் என்று ஹொரண மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன முடிவு செய்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குடும்பங்களின் உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், நான்கு மாதங்களாக கஹதுடுவா பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளனர்.
மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக நண்பரிடம் சைக்கிள் வாங்கி சுற்றுலா சென்ற போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
