யாழில் வல்லைப்பாலத்தில் தவறி விழுந்து இளைஞரொருவர் மாயம் (PHOTOS)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல்போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
இன்று (22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று இளைஞர்கள் பொதுமக்களால் பிடிப்பு
இதன்போது இளைஞரொருவர் தவறி விழுந்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்துள்ளனர்.
இதன்போது தப்பி சென்றுள்ளவர்களில் மூன்று இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
