திருமண நிகழ்வுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் மரணம்
காலியில் சதுப்பு நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய, படபொல பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கரந்தெனிய மண்டகந்த பகுதியை சேர்ந்த தனுஷ்க குணவர்தன என்ற 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு
படபொல, கொண்டகல பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 16 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

எனினும் தனது மகன் இன்று வரை வீடு திருப்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தாயார் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் குறித்து படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri