இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள விபரீதம்
காலி - எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று (08) பிற்பகல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைஹேன, மட்டக்க பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் எல்பிட்டிய பொது விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri