வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் அநுரவின் அதிரடி நடவடிக்கை
இதுவரைகாலமும் இலங்கையில் இருந்த அரசியல் தலைமைகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி என்பது சவால்களை தோற்றுவித்துள்ளது என்பதை சில நடைமுறை செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த மாதம் 22ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவின் செயற்பாடுகள் இலங்கையிலும், சர்வதேச அரங்கங்களிலும், கருத்தாடல்களை தோற்றுவித்துள்ளன.
இதில் முக்கிய விடயமாக முன்னாள் அரசியல் பிரமுகர்கள் மாத்திரமல்லாது தற்போதுள்ள அரசியல் தலைமைகளினுடைய பாதுகாப்பில் அநுர அரசானது பாரிய கவனத்தையும் மாற்றங்களையும் செயற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, பிரதமர் பாதுகாப்பு பிரிவு மற்றும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு என்பவற்றை மட்டுப்படுத்தும் ஒரு செயற்பாட்டை அநுர மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிற முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரிகளை அனுப்புவது தற்போதைய அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே அநுரவின் நடைமுறையின் எடுத்துக்காட்டு.
இவ்வாறான செயற்பாடுகளை ஆராயும் நோக்கோடு நடத்தப்பட்ட லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் நாட்டின் பாதுகாப்பு நடைமுறை தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.
குறிப்பாக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் பாதுகாப்பு பிரிவில் ஜனாதிபதியொருவர் மேற்கொள்ளும் மாற்றங்களையும், இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ள புதிய ஜனாதிபதி எவ்வாறான திட்டமிடல்களை மேற்கொண்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் புதிய அரசியல் மாற்றங்களின் நேற்றைய, தற்போதைய, நாளைய நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை தொகுத்து வருகிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
