மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு
மீரிகம ரயில் பாதைக்கு அருகில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம விஜய ரஜதஹான மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் திலினாகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய திருமணமாகாத இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தந்தையின் வாக்குமூலம்
நேற்று மதியம் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதாகவும், பிற்பகலில் இருந்து அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவில் எங்கு பயணம் செய்தார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீரிகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி துசித பிரமோத் விஜேவர்தன மற்றும் பொலிஸ் குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
மர்மான முறையில் மரணம்
உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது இல்லத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் போது ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் நிகழ்ந்தா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களால் ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam