துப்பாக்கிகளை ஒப்படைத்த யோஷித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa ) மகன் யோஷித ராஜபக்ச (Yositha Rajapaksa) தம்மிடம் இருந்த, இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்ததாக தகவலறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக அவரிடம் இருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிகள்
யோஷித ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடற்படை அதிகாரியாக செயற்பட்டார்.இதன்போதே அவருக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் அவர் பின்னர் கடற்படையில் இருந்து விலகியதுடன் இதற்கிடையில் காணி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri